தமிழக மக்கள் மண் மீது மிக மரியாதை மட்டுமல்ல ஆர்வத்தையும் கொண்டவர்கள்.
இப்படி தமிழ் பெயர் சொல்லி யார் வந்தாலும் அவர்களை வாழ வைத்து அழகு பார்ப்பதில் தமிழர்கள் என்றுமே முதலிடம் தான்.
அந்த வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழர்கள் அமோக வரவேற்பு தருகின்றனர்.
அதற்கு அணித் தலைவர் டோனியும், மண் மீது கொண்ட ஆர்வமும் தான் தமிழ் ரசிகர்களுக்கு காரணமாக உள்ளது.
இதனிடையில், ஐபிஎல் இணையதளம் மூலம் சென்னை அணி அல்லாத மற்ற அணி விளையாடும் போட்டிகளுக்கு குறைந்த பட்ச விலை ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு குறைந்த விலை ரூ. 800 என அறிவிக்கப்பட்டுள்ளதோடு அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துள்ளது.
மேலும், மற்ற அணி விளையாடும் போட்டுகளுக்கு டிக்கெட் என்ற பட்டன் வேலை செய்யும் நிலையில், சென்னை அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, டிக்கெட் பட்டன் வேலை செய்யவில்லை.
அதுமட்டுமில்லாமல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை இதுவரையில்லாத அளவில் அதிகமாக உள்ளது.
இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் ரசிகர்களின் அன்பை ஐபிஎல் முடிந்த வரை பணமாக்க பார்க்கிறதா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.