ஐசிசி விருதுகளில் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் என்று இரட்டை விருதுகளைத் பெற்றுள்ளார் அஸ்வின்.
ஐசிசி வருடாந்திர விருதுகளில் சச்சின், திராவிட் ஆகியோருக்குப் பிறகு 3-வது வீரராக ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை அஸ்வின் பெற்றுள்ளார்.
இந்த விருது அறிவிப்புக்குப் பின்னர் இந்திய அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய அஸ்வின் தன் குடும்பத்தினருக்கும் அணி வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார், ஆனால் முன்னாள் கேப்டன் தோனிக்கு நன்றி கூறவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அஸ்வினுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.
ட்வீட்கள் சில:
# கேப்டனும், லெஜண்டுமான தோனியை புறக்கணித்ததற்கு நன்றி அஸ்வின்!! பழச மறக்காதீங்க அஸ்வின்.
# யாரால் இவரது கிரிக்கெட் வாழ்வு பிரகாசம் பெற்றதோ அவரை புறக்கணிக்க முயல்கிறார்.. நான் அஸ்வின் ரசிகர்தான் ஆனால் இது அராஜகம்.
# தோனியை குறிப்பிடாதது குறித்து அவரது ரசிகர்கள் ஏன் காட்டுக்கூச்சலிடுகின்றனர் என்று தெரியவில்லை. அவர் எம்.எஸ்.டி. அவர் எந்த ஒரு புகழுக்கும் ஆசைப்படுபவர் அல்ல. எனவே தோனி ரசிகர்களே அமைதி காக்கவும்.
இது போன்ற மேலும் பல ட்வீட்கள் அஸ்வினை எதிர்த்து ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment