உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவரான சமி, பெங்கால் அணிக்காக ஆடி வருபவர். இந்திய அணியில் இடம் பெற்றிருப்பவர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3வது போட்டியில் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாமல் போய் விட்டது.
இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுடன் தனது உறவு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்துள்ளார் சமி. பேட்டியில் சமி கூறியதிலிருந்து...
வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு:
இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது எனக்கு பெருமை தருகிறது. டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும்போது வீட்டில் இருப்பதைப் போன்றே உணர்வேன். இந்திய வீரர்களுடனான உறவு உணர்வுப் பூர்வமானது.
ஆங்கிலம் தெரியாவிட்டாலும்:
எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது. இதனால் ஆரம்பத்தில் தடுமாறினேன். ஆனால் வீரர்கள் அதைப் பொருட்படுத்தாமல் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டனர். தட்டிக் கொடுத்து ஊக்கம் தந்தனர்.
டோணி அப்பா:
கேப்டன் டோணி குறித்துக் கேட்டால் என்ன சொல்வது.. எனக்கு அவர் அப்பா போல. ஒரு தந்தை - மகன் உறவு போன்றது எங்களுடைய உறவு. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றார் சமி.
0 comments:
Post a Comment