சூதாட்டம்.. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 2 ஆண்டுகள் விளையாடத் தடை!


கேப்டவுன் : தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அல்விரோ பீட்டர்சன் உள்நாட்டுப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது உறுதி செய்யப்பட்டதால் 2 ஆண்டுகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான அல்விரோ பீட்டர்சன் அந்நாட்டு அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள் 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 36 வயதான இவர் கடந்த மாதம் நடைபெற்ற உள்நாட்டுப் டி20 கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது தான் சூதாட்ட தரகரை சந்தித்ததாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் போட்டியின் முடிவை நிர்ணயிக்க பணம் பெறும் எண்ணத்தில் சந்திக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

இருப்பினும் கிரிக்கெட் சூதாட்ட தரகரை சந்தித்ததால் பீட்டர்சனுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் அவர் 2018ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வரை சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது.



Share:

0 comments:

Post a Comment

Like as Our Facebook Page

Total Pageviews

Blog Archive