பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம், துப்பாக்கி போன்றவர் என்றும் ’விராட் கோலிக்கு இணையானவர் என்றும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் ரன் குவிக்கும் இயந்திரம் என்று வர்ணிக்கப்படுப்வர் விராட் கோலி. கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார்; இன்னும் பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரும், தற்போதைய பாகிஸ்தான் பயிற்சியாளருமான மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை ஏகபோகமாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள மிக்கி ஆர்தர், “ஆசம் துப்பாக்கியைப் போன்ற இளம் வீரர். அசாதாரணமான வீரராக திகழ்வார். இதே வயதில் நுழைந்த விராட் கோலியைப் போல அற்புதமான வீரர். நான் அதிகப்படியான பாராட்டை தெரிவிப்பதாக இருக்கலாம். ஆனால், அதுதான் சரி” என்றார்.
18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் ஆசம் 3 சதங்கள் மற்றும் 5 அரைச்சதங்கள் உட்பட 886 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 52.11 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 93.55 ஆகவும் இருக்கிறது. மேலும், 3 சதங்களும் தொடர்ச்சியாக அடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 26 சதங்கள் மற்றும் 38 அரைச்சதங்கள் உட்பட 7570 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 52.93 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 90.43 ஆகவும் உள்ளது.

0 comments:
Post a Comment