31 வருடங்களுக்கு பிறகு உலக அளவில் ஒரு சாதனை.. சென்னை மண்ணில் அஸ்வின் அசத்தல்


சென்னை: 
31 வருடங்களுக்கு பிறகு உலக டெஸ்ட் அரங்கில் ஆல்-ரவுண்டராக அஸ்வின் ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் கிடைப்பது அரிதிலும் அரிதான விஷயமாக இருந்தது. கபில்தேவ், ராபின் சிங், அகர்க்கர், இர்ஃபான் பதான், யுவராஜ் சிங் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஆல்-ரவுண்டர்களைத்தான் இந்திய அணி தனது வரலாற்றில் கண்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் அசைக்க முடியாத ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ளார் அஸ்வின். அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவரது சாதனை தொடருகிறது. விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும், ரன்களை குவிப்பதிலும் கபில் தேவுக்கு இணையாக அஸ்வின் மாறியுள்ளார்.

வரலாற்றிலேயே 7 பேர்:

 ஒரு டெஸ்ட் தொடரில் 250 ரன்களுக்கு மேல் எடுத்ததோடு, 25 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியவர்கள் வரலாற்றிலேயே 7 பேர்தான். அந்த எலைட் குரூப்பில் அஸ்வினும் தற்போது இணைந்துள்ளார். நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் இந்த சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.


Share:

0 comments:

Post a Comment

Like as Our Facebook Page

Total Pageviews

Blog Archive