டெல்லி: விவோ ஐபிஎல் 2017 தொடரில் ஆடுவதற்காக மொத்தம் 8 அணிகள் ரெடியாகியுள்ளன. அவற்றில் 44 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 140 கிரிக்கெட் வீரர்கள் இதுவரை இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. எஞ்சியுள்ள வீரர்கள் அடுத்த ஆண்டு போட்டி தொடங்கும் முன்பாக ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள்.
ரைசிங் புனே சூப்பர்ஜையான்ட்ஸ் அணி, மகேந்திர சிங் டோணி தலைமையிலேயே வரும் ஐபிஎல் தொடரிலும் களம் காண உள்ளது. குஜராத் லயன்ஸ் அணியின் தலைவராக சுரேஷ் ரெய்னா தொடருவார். புனேவும், குஜராத் அணியும் தலா 16 பழைய வீரர்களை தங்கள் வசம் வைத்துள்ளன.
மும்பை மற்றும் டெல்லி அணியின் வீரர்களையும் இப்பட்டியலில் நீங்கள் பார்க்கலாம்.
விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது பழைய 20 வீரர்களை தக்க வைத்துக்கொண்டுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது 17 பழைய வீரர்களை தக்க வைத்துள்ளது.
பஞ்சாப் அணி, பழைய 19 வீரர்களையும், கொல்கத்தா அணி பழைய 14 வீரர்களையும் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
அணிகளிடமுள்ள நிதி நிலவரத்தையும் இந்த பட்டியலில் நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment